நாகர்கோவில் அருகேயுள்ள பெரியவிளை கிராமத்தைச் சேர்ந்த அருள், தனியார் ஹோட்டலில் இருந்து தனது குடும்பத்தினருக்கு மந்தி பிரியாணி வாங்கிச்சென்றுள்ளார். இந்நிலையில் பிரியாணி சாப்பிட்ட சில மணி நேரங்களில் அடுத்தடுத்து 15 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 3 குழந்தைகள் 4 பெண்கள் உட்பட 15 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினர் சாப்பிட்ட பிரியாணி தான் உடல்நலம் பாதிக்கப்பட காரணம் என கூறப்படுகிறது.