புதுக்கோட்டை மாவட்டம் வேங்கிடக்குளம் கிராமத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஊர் மக்கள் சார்பில், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளை காளைகள் பங்கேற்ற நிலையில், 13 குழுக்களைச் சேர்ந்த 117 மாடுபிடி வீரர்கள், காளைகளை அடக்கியதை ஏராளமான பொதுமக்கள் ஆராவாரத்துடன் கண்டு ரசித்தனர்