புதுக்கோட்டை மாவட்டம் மாங்கோட்டை காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. அதில் புதுக்கோட்டை மட்டுமன்றி திருச்சி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 13 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.