கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் மணிவண்ணன் என்பவரது கட்டை விரலை கடித்து துப்பிய நபரை போலீசார் கைது செய்தனர். முருகன்குடி பேருந்து நிறுத்தத்தில் மது போதையில் இரு இளைஞர்கள் அங்கிருந்தவர்களை ஆபாசமாக பேசி திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மணிவண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரையும் ஆபாசமாக திட்டியுள்ளனர். இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.