முன்னாள் ராணுவ வீரரின் மனைவியை கட்டைக்கம்பால் அடித்து கொலை செய்த உள்ளூர்க்காரர். 25 ஆண்டுகளாக ஆந்திராவின் பல்வேறு இடங்களில் தங்கி தலைமறைவு. சொந்த ஊருக்கு வந்த கொலையாளியை பேருந்து நிலையத்திலேயே சுற்றி வளைத்த போலீசார். முன்னாள் ராணுவ வீரரின் மனைவியை உள்ளூர்க்காரர் கொலை செய்தது ஏன்? 25 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியை போலீசார் மடக்கி பிடித்தது எப்படி?சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பக்கத்துல உள்ள உம்பிளிக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி. இவருக்கும் அதே பகுதியில இருந்த முன்னாள் ராணுவ வீரர் சாமிநாதன்ங்குறவரோட மனைவி ராணிக்கும் இடையில தகாத உறவு ஏற்பட்ருக்குது. சில ஆண்டுகள் நல்லதம்பிகூட ரிலேஷன்ஷிப்ல இருந்த ராணி, அதுக்குப்பிறகு தகாத உறவே வேண்டாம், அது எப்ப இருந்தாலும் ஆபத்து தான், என் கணவருக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனையிலபோய் முடியும்னு நல்லதம்பிக்கிட்ட சொல்லிருக்காங்க.அதை ஏத்துக்காத நல்லதம்பி, தகாத உறவ துண்டிக்க முடியாது, நீ எப்பவும் போல பேசிதான் ஆகணும், பழகிதான் ஆகணும்னு கட்டாயப்படுத்திருக்காரு. அதுக்கு, பிள்ளைகளோட எதிர்காலமே வீணாகிரும், அதனால கண்டிப்பா தகாத உறவை தொடர முடியாதுனு அழுத்தமா சொல்லிருக்காங்க ராணி. அதக்கேட்டு டென்ஷன் ஆன நல்லதம்பி, சரி, நீ சொல்றத கேக்குறேன், ஆனா கடைசியா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்னு காட்டுவளவு பகுதிக்கு அழைச்சிட்டு போயிருக்கான். கடைசி சந்திப்புதானேனு நம்பி ராணியும் நல்லதம்பிகூட போய்ருக்காங்க.ஆனா, அங்கபோயும் ராணிக்கிட்ட தகாத உறவ துண்டிக்க முடியாதுனு பிடிவாதமா நின்னுருக்கான் நல்லதம்பி. அதனால ரெண்டுபேருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ருக்குது. அப்போ, ஆத்திரத்தோட உச்சிக்குப்போன நல்லதம்பி பக்கத்துல கிடந்த ஒரு கட்டைக்காம்பால ராணியோட தலையில அடிச்சிருக்கான். அதுல, அதிக ரத்தம் வெளியேறி சம்பவ இடத்துலேயே ராணி உயிரிழந்துட்டாங்க. மூச்சுபேச்சு இல்லாம கிடந்த ராணிய அங்கேயே போட்டுட்டு எஸ்கேப் ஆகிட்டான் நல்லதம்பி. அதுக்குப்பிறகு சடலத்த மீட்ட போலீசார், அக்கம்பக்கத்துல உள்ளவங்க, சொந்தபந்தங்கள், ராணியோட உறவினர்கள் எல்லார்கிட்டயும் விசாரணை பண்ணதோட சிசிடிவி கேமராக்களையும் செக் பண்ணிருக்காங்க. அப்போ, ராணியும்-நல்லதம்பியும் பைக்ல ஒண்ணா போன காட்சியும் பதிவாகி இருந்துருக்குது. இந்த கொலை நடந்தது 2000-ல.. அப்போ நல்லதம்பிக்கு வயசு 35.அப்போ இருந்தே தலைமறைவான நல்லதம்பியை தீவட்டிப்பட்டி போலீசார் வலைவீசி தேடிருக்காங்க. ஆனா, யார்கண்ணுலயும் சிக்காத நல்லதம்பி ஆந்திராவுல பல்வேறு இடங்கள்ல தங்கி ஓட்டல்கள்ல வேலை பாத்து வயித்த கழுவிருக்காரு. இப்போ, 60 வயசாகுற நல்லதம்பி 5 வருஷத்துக்கு ஒருமுறை சொந்த கிராமத்துக்கு நைட்டோட நைட்டா வந்து சொந்தபந்தங்கள பாத்துட்டு போறதா போலீசுக்கு ஒரு ரகசிய தகவல் கிடைச்சிருக்கு. அந்தநேரங்கள்ல போலீசார் வளைச்சி பிடிக்க முயற்சி பண்ணிருக்காங்க. ஆனா, முடியல.. அதே மாதிரிதான், நல்லதம்பி கிராமத்துக்கு வர்றதா தற்போதும் போலீசுக்கு தகவல் கிடைச்சிருக்கு. அப்போ, உஷாரான காவலர்கள் இந்தமுறை நல்லதம்பிய விடவேக்கூடாதுனு கிராமத்துல சந்து, மூலைமுடுக்கு, இண்டு இடுக்குனு எல்லா பக்கத்துலயும் மப்டியில நின்னு கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்தி கண்காணிச்சிருக்காங்க. அந்த கண்காணிப்பு வீண்போகல. தங்களுக்கு வந்த தகவல்படியே நல்லதம்பி தீவடிப்பட்டி பஸ் ஸடாப்ல ஒரு பேருந்துல வந்து இறங்கிருக்கான். அப்போ, கோழி அமுக்குறமாதிரி நல்லதம்பிய அமுக்குன போலீசார் காவல் நிலையத்துக்கு கொண்டு போய்ட்டாங்க. அடுத்து, நல்லதம்பிய ஓமலூர் கோர்ட்ல ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில அடைச்சிருக்காங்க. 25 வருஷமா நேக்கா போலீசார் கண்ணுல தூவுன நல்லதம்பி இப்போ சிறையில கம்பி எண்ணிட்டு இருக்கான்.இதையும் பாருங்கள் - அதிமுக எம்எல்ஏ சுட்டுக் கொ*ல, பவாரியா கொள்ளையர் வெறிச்செயல், வரும் 21ம் தேதி நடக்கபோவது என்ன?