சாலை விபத்தில் காயமடைந்தவர், மது போதையில் ரத்தம் சொட்ட சொட்ட தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற மறுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பென்னாகரம் அடுத்த அரகாசனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். லாரி ஓட்டுநரான இவர், மதுபோதையில் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளார். இதையடுத்து, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்த நிலையில், தருமபுரி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநருடன் சரவணன் ரகளையில் ஈடுபட்டார்.இதையும் படியுங்கள் : சாலை விபத்தில் லேப் டெக்னீசியன் மாணவன் உயிரிழப்பு இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்