அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பேருந்தில் ஏறிய நபரை சரமாரியாக தாக்கிய நான்கு பேர் கும்பலில் ஒருவரை கைது செய்த போலீசார், மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இறவாங்குடி கிராமத்தை சேர்ந்த சிவகுமார், முன்னூரான் காடுவெட்டி பேருந்து நிறுத்தம் அருகே மது அருந்தி கொண்டிருந்தவர்களை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் சிவகுமாரை தாக்கியதையடுத்து, அவ்வழியாக வந்த பேருந்தில் ஏறிய அவரை, அக்கும்பல் விடாமல் தாக்கியது. இதுதொடர்பாக வினோத்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.