கன்னியாகுமரி மாவட்டம் மாம்பழத்துறையாறு அணை முழு நீர்மட்டத்தை எட்டியதை தொடர்ந்து, தூவலாறு, வள்ளியாறு கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 54.12 அடியை எட்டியதால், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது 96 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், மழை தொடர்ந்து பெய்து வருவதால் தூவலாறு வழியாக கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படலாம் என்பதால், மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.