சென்னையில் இருந்து 113 பயணிகளுடன் கோலாலம்பூர் புறப்பட இருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் இயந்திர கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமமடைந்தனர். விமானத்தில் பயணிகள் அனைவரும் அமர்ந்துவிட்ட நிலையில் , விமானம் புறப்பட தயாரான போது விமானத்தில் கோளாறு இருப்பதாக சிக்னல் கிடைத்த நிலையில், உடனடியாக பயணிகள் கீழே இறக்கப்பட்டு விமானம் ரத்து செய்யப்பட்டது.