தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுற்றுபகுதிகளில் மக்காச்சோளம் தொடர் விலை சரிவை சந்தித்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். போடிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளான மீனாட்சிபுரம் , விசுவாசபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் மக்காச்சோளம் மற்றும் பேபிகார்ன் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அவை அறுவடைக்கு தயராக உள்ள நிலையில் உரிய விலையில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குவிண்டால் ஒன்று 2 ஆயிரத்து 800 வரை விற்ற காய்ந்த மக்காச்சோளம் தற்போது 2 ஆயிரத்து 350 க்கும், பேபி கார்ன் 8 முதல் 11 ரூபாய்க்கு மட்டும் கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.