சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லக்கூடிய மின்சார ரயில் சேவை நாளை மாலை 5 மணி வரை முழுமையாக ரத்து செய்யப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் ரயில்நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பராமரிப்பு பணி காரணமாக 10 மணி நேரம் ரயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.