கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் அவுட்லுக் மெயில் மூலம் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் அளித்ததன்பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருடன் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.