10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டிட்டோ ஜாக் அமைப்பு ஆகஸ்ட் 22ஆம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் அந்த அமைப்பின் உயர் மட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.