மறு பிறவி, பாவ புண்ணியம் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய ஆன்மீக சொற்பொழிவாளர் மகா விஷ்ணு, அருகில் இருந்தவரிடம் இதை சொல்லலாமா வேண்டாமா என கேட்டு வடிவேலு பாணியில், சரி சொல்லி தொலைப்போம் என்று, இளம் வயது கல்வியிலேயே ஞான கல்வி அவசியம் என்றார். கோவை தெலுங்குபாளையம் பகுதியில் பரம்பொருள் பவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற தைப்பூச சத்சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை கூறினார்.