தருமபுரி மாவட்டம் மதிகோன்பாளையம் மகாசக்தி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருவீதி உலா, வெகு விமரிசையாக நடைபெற்றது.கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் விநாயகர் வழிபாடு, சாமி அழைத்தல், முனியப்பனுக்கு பொங்கல் வைத்தல், திரௌபதி அம்மன் அழைப்பு, திருக்கல்யாணம் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்றன.அதன் ஒரு பகுதியாக சுவாமி திருவீதி உலா வெகு சிறப்பாக நடைபெற்றது.அதில் செண்டை மேளம், பம்பை, தாரை தப்பட்டை உள்ளிட்ட இசைக்கருவிகள் முழங்க, பரமசிவன், பார்வதி உள்ளிட்ட தெய்வ வடிவம் தரித்த கலைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர்.