மகாராஷ்டிரா துணை முதல்வரை விமர்சித்த விவகாரம் தொடர்பாக நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா விழுப்புரம் மாவட்டம் வானூர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றார். ஏக்நாத் ஷிண்டே குறித்து விமர்சித்து குணால் கம்ரா வீடியோ வெளியிட்டது தொடர்பாக மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அங்கு ஜாமீன் கோர முடியாத சூழல் நிலவுவதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.