திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்வெள்ளியூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் சன்னதியில் மகர ஜோதி ஏற்றப்பட்டு ஏராளமான பக்தர்கள் ஐயாயிரம் விளக்கு ஏற்றி வழிபட்டனர் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மகரஜோதி விளக்கு ஏற்றப்படுவது வழக்கம் அந்த வகையில் சபரிமலையில் மகரஜோதி ஏற்றுவது போல் வந்தவாசி அடுத்த கீழ்வெள்ளியூர் கிராமத்தில் உள்ள ஐயப்பன் சன்னதியில் மகரஜோதி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது இதை தொடர்ந்து முன்னதாக ஸ்ரீ ஐயப்பனுக்கு பல்வேறு மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது பின்னர் சரியாக 6:00 மணி அளவில் மகரஜோதி விளக்கு ஏற்றப்பட்டது அப்போது பக்தர்கள் சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரணம் கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து ஸ்ரீ ஐயப்பனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது பின்னர் பக்தர்கள் கோவில் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட விளக்கேற்றி வழிபட்டனர் இந்த சிறப்புமிக்க மகரஜோதி விளக்கை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஐயப்பனை தரிசனம் செய்து சென்றனர்.இதையும் படியுங்கள் : மார்கழி மாத நிறைவு நாளை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம்