காசி விஸ்வநாதர் கோவிலில் மகாமக திருவிழா : கும்பகோணம் மகாமக குளக்கரைகள் அமைந்துள்ள ஸ்ரீ விசாலாட்சி சமேத ஶ்ரீ காசிவிசுவநாதர் கோயிலிலில் மாசி மக பெருவிழாவை முன்னிட்டு விநாயகர் வள்ளி தேவானை சமேத முருகப்பெருமான் காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகளும் சிறப்பு மலர் அலங்காரத்தில். கொடி மரம் அருகே எழுந்தருள கொடி மரத்திற்கு திரவியப்பெட்டி, மாப் பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர் சந்தனம் என பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியம் பெருமான் உருவம் வரையப்பட்ட கொடிக்கு தீபாராதனை செய்யப்பட்டு மாசி மக கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களை சுவாமி வீதி உலா நடைபெறுகிறது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மக தீர்த்தவாரியானது மகாமக குளத்தில் வருகிற மார்ச் 2ஆம் தேதி நண்பகல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Related Link ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்