தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தில் பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டுள்ளனர். எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் இல்லத்தின் முன்பகுதி மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. இந்நிலையில், பாரதியாரின் வீட்டை 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாமிநாதன் சட்டசபையில் தெரிவித்தார்.