மயிலாடுதுறையில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த 16 கைகளில் ஆயுதம் ஏந்திய ஸ்ரீ மகா காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஏற்பாடு, மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 7ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. இன்று, காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு, மாயூரநாதர் ஆலயத்தில் இருந்து புனிதநீர் அடங்கிய கடம், மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை மேல் ஏற்றி கொண்டுவரப்பட்டது. மேள, தாள வாத்தியங்கள் முழங்க பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் கோயிலை ஊர்வலம் வந்தடைந்தது. தொடர்ந்து யானை அபயாம்பிகைக்கு கஜ பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் 11ஆம் தேதி காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று, காலை 10 - 11 மணிக்குள் கும்பாபிஷேக பெருவிழா நடைபெற உள்ளது.