வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வந்த மக்னா காட்டு யானை, நடை பாதையில் திடீரென ஓடியதால் நடை பயிற்சி சென்றவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.நீலகிரி மாவட்டம், கூடலூர் சுற்று வட்டார பகுதியில் மக்னா காட்டு யானை, வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வருவது வாடிக்கையாகி விட்டது. இன்று காலை நடுகூடலூர் பகுதியில் மக்னா யானை திடீரென ஊருக்குள் வந்தது. அப்போது, நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் காட்டு யானையைப் பார்த்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர், காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.