நீலகிரி மாவட்டம் கூடலூரில் காட்டு யானை ஒன்று வனத்துறையினரை ஆக்ரோஷமாக விரட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடலூர் மூன்றாம் மைல் பகுதியில் சுற்றி திரிந்த மக்னா யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க முயன்றனர். அப்போது, அந்த யானை அவர்களை நோக்கி ஆவேசமாக ஓடி வந்ததை பார்த்து வனத்துறையினர் அலறியடித்தப்படி தப்பி ஓடினர். பின்னர், மக்னா யானை அங்கிருந்த கடையின் மேற்குறை இருப்பு தகரத்தை சேதப்படுத்திவிட்டு திரும்பி சென்றது.மக்னா யானையை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.