சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில், அரசு தரப்பு சாட்சியான தூத்துக்குடி மாஜிஸ்திரேட்டிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்த வழக்கில் சாட்சியம் அளித்த தூத்துக்குடி மாஜிஸ்திரேட் சக்திவேலிடம் குறுக்கு விசாரணை நடத்த, கீழமை நீதிமன்றம் அனுமதி மறுத்ததை எதிர்த்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சப்- இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் தரப்பில் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,ரகுகணேஷ் தரப்புக்கு பலமுறை வாய்ப்பளித்தும் குறுக்கு விசாரணை நடத்தப்படவில்லை என்றும், வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் மனு தாக்கல் செய்திருப்பதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.