தமிழகத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்களில் மதுரை முதன்மை மாவட்டமாக திகழ்வதாக, அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா வேதனை தெரிவித்துள்ளார். மேலூரில் நடைபெற்ற தீண்டாமை குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய அவர், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.