முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்திவிழாவையொட்டி ராமநாதபுரம் செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார். இதனை தொடர்ந்து மதுரை, தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் முதலமைச்சர் பின்னர் ராமநாதபுரம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார். முதல்வரின் வருகையையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.