மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை என்ற நிகழ்வு நடைபெற்றது.மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணித்திருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு திருவிளையாடல் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.6ஆம் நாள் நிகழ்வாக சுவாமிக்கும் அம்மனுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.