ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரிய மனுவை தள்ளபடி செய்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ராமேஸ்வரம் பகுதியில் சட்டவிரோதமாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக கூறி, அதனை அகற்ற உத்தரவிட கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளாட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுங்கச்சாவடி மையத்தையே அகற்றுமாறு மனுதாரர் கோரியுள்ளது ஏற்கத்தக்கதல்ல என குறிப்பிட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.