திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா வழிபாடு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி சன்னதி தெருவில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த சையது ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு போலீஸார் அனுமதி மறுத்தது சரியே என தெரிவித்தனர்.