மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு நேர சேவைகளுக்கு எந்த விமான நிறுவனமும் இதுவரை முன் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இரவு நேர சேவைகளுக்கு கூடுதலாக 50 சிஐஎஸ்எப் வீரர்கள் மட்டுமே வந்துள்ளதாகவும் மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் கவலை தெரிவித்துள்ளார்.