இரு பிரிவினருக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் பொய் தகவலை பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மதுரை ஆதீனம் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தமக்கு எதிராக உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த மே மாதம் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காரில் வந்த தன்னை கொலை செய்ய சதி நடந்ததாகவும், அதில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் மதுரை ஆதீனம் சந்தேகம் எழுப்பியிருந்தார். இந்த நிலையில், வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவரின் புகாரின் பேரில், மதுரை ஆதீனத்தின் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.