பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக கைது செய்யப்பட்ட சத்யாவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சத்யாவை ஆன்லைன் செயலி மூலம் திருமணம் செய்த தாராபுரத்தை சேர்ந்த மகேஷ் அரவிந்த், மனைவிக்கு வேறு சில ஆண்களுடன் தொடர்பு இருந்ததை அறிந்து தட்டிக் கேட்டதால் சத்யா வீட்டை விட்டு வெளியேறினார்.போலீஸ் விசாரணையில் சத்யா பலரை திருமணம் செய்து ஏமாற்றியது தெரிய வந்தது.புதுச்சேரியில் பதுங்கி இருந்த சத்யா கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்த சத்யா, கைதாகி 60 நாட்களுக்கு மேலாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.