தஞ்சை மாவட்டம் மதுக்கூர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் முதியவரை உதவி ஆய்வாளர் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.முக்கூட்டு சாலையில் திருநாவுக்கரசு நடத்தி வரும் பெட்டிக்கடைக்கு சென்ற SI ஜீவானந்தம், கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பொருள் வைத்திருந்தாக கூறி முதியவரை தாக்கி, காவல்நிலையத்திற்கு அழைத்துசெல்ல முயன்றார்.