மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக, கேரளாவை சேர்ந்த எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வந்த அக்கட்சியின் அகில இந்திய மாநாட்டின் நிறைவு நாளில் மத்தியக் குழு, அரசியல் தலைமைக் குழு, கட்டுப்பாட்டுக் குழு உள்ளிட்ட குழுக்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.