திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தனர். கொடைக்கானல் பிளிஸ்வில்லா தெருவிலுள்ள 100 ஆண்டுகள் பழமையான புனித அந்தோணியார் ஆலய திருவிழாவின் நிறைவு நாளான நேற்று புனித அந்தோணியார், மாதா, செபஸ்தியார், மைக்கேல் ஆகியோரின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது.