எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அக்டோபர் 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 2025-30ஆம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தில் அறிவிக்கப்பட்ட புதிய விதிமுறைகளை தளர்த்த கோரி கடந்த மார்ச் மாதம் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இந்நிலையில், 3,500 டேங்கர் லாரிகளுக்கு ஒப்பந்தம் கோரிய ஆயில் நிறுவனங்கள், 2,800 டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியதாக வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிவாயு முனையத்தில் 100க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதையும் படியுங்கள் : நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகியது