வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால்,புதுச்சேரியில் சுற்றுலாப்படகுகளை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், அங்கு கடல் அலை 2.7 மீட்டர் முதல் 3.6 மீட்டர் வரை எழக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேங்காய்த்திட்டு துறைமுகப் பகுதியில் மீன்பிடி விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா படகுகளை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.