வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வரும் நிலையில், புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. முன்னெச்சரிக்கையாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், படகுகள், மீன்பிடி உபகரணங்கள் கடற்கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும், கடல் கொந்தளிப்புடன் சீற்றமாக காணப்படுவதால் யாரும் கடலில் இறங்கவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.