கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எதிர்ப்பை மீறி, காதலர்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில், பெண் வீட்டாரும் காதலனின் நண்பர்களும் மத்தூர் காவல் நிலையம் முன்பு தகராறில் ஈடுபட்டனர். மகளை காணவில்லை என பெண் வீட்டார் புகாரளித்த நிலையில், போலீஸ் நிலையத்திற்கு வந்த காதல் ஜோடியை பேருந்து நிலையத்தில் மடக்கி பெண்ணின் உறவினர்கள் தாக்குதல் நடத்தினர்.இதையும் படியுங்கள் : இருளர் இன சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார்... போக்சோ சட்டத்தின் கீழ் ஆட்டோ ஓட்டுநர் கைது