அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் தற்கொலை செய்து கொண்டனர். சோழன்குறிச்சி கிராமத்தில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த திவ்யா என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த அன்பரசனை காதலித்ததாக கூறப்படுகிறது. இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்காததால் மனமுடைந்த இருவரும் ஒரே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.