மதுரையில் காதலித்து கர்ப்பமாக்கிய பெண்ணிடம் 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக காதலனையும், அவனது பெற்றோரையும் போலீஸார் கைது செய்தனர். நிலையூரை சேர்ந்த அஜயன், ஜராவதநல்லூரை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி நெருக்கமாக இருந்ததில், அப்பெண் கர்ப்பமானார். ஆனால், திருமணம் செய்யாமல் ஏமாற்றியதோடு, 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக புகார் அளித்தார்.