திருப்பூர்... 17 நாட்கள் வீட்டைவிட்டு வெளியில் சென்ற மகள். கன்னியாகுமரிக்கு சென்று மகளை அழைத்து வந்த பெற்றோர். அடுத்த சில மணிநேரங்களில் காய்கறி வெட்டும் கத்தியால் மகளின் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை. மகள் வீட்டைவிட்டு சென்றது ஏன்? பெற்ற தந்தையே மகளை கொலை செய்ததற்கான காரணம் என்ன?மகள் கிடந்த கோலத்தை கண்டு அதிர்ச்சியடைந்த தாய்கடைக்கு போயிட்டு, வீட்டுக்கு வந்த தாய், மகள் கிடந்த கோலத்தை பாத்து கத்தி கூப்பாடு போட்ருக்காங்க. சத்தம் கேட்டு ஓடிவந்த ஹவுஸ் ஓனரும், அக்கம்பக்கத்துல உள்ள மக்களும் போலீசுக்கு தகவல் குடுத்துருக்காங்க. அடுத்த கொஞ்சநேரத்துல அங்க வந்த போலீசார், காவல் நிலையத்துல பஞ்சாயத்த பேசி முடிச்சுதானே அனுப்பி வச்சோம், அதுக்குள்ள இப்படி பண்ணிட்டீங்களேனு தம்பதியை திட்டினதோட, இளம்பெண்ணோட சடலத்தை மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அடுத்து, எந்த சலனமும் இல்லாம அமைதியா உக்காந்துருந்த இளம்பெண்ணோட தந்தைக் கிட்ட நாங்க அவ்ளோ அட்வைஸ் பண்ணிதானே அனுப்பினோம். அப்படியும் இந்த மாதிரி பண்ணினா என்ன பண்ண முடியும்னு சொல்லிக்கிட்டே கைது பண்ணிருக்காங்க போலீசார். காரணம், இளம்பெண் கிடந்த கோலத்துக்கான காரணமும், அந்த இளம்பெண்ணோட தந்தை சலனமே இல்லாம அமைதியா இருந்ததுக்கான காரணமும் போலீசாருக்கு ஏற்கனெவே தெரிஞ்ச விஷயந்தான். மகள் இருக்கும் அதே பகுதிக்கு குடியேறிய ஆறுமுகம்மதுரை, உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் தன்னோட மகள் சீமியாவை திருப்பூர் பனியன் கம்பெனியில வேலை பாத்துட்டு இருந்த பிரவீன் குமார்ங்குற இளைஞருக்கு கடந்த அஞ்சு வருஷத்துக்கு முன்னால கல்யாணம் பண்ணி குடுத்துருக்காங்க. சீமியா-பிரவீன்குமார் தம்பதிக்கு மூன்றரை வயசுல ஒரு பெண் குழந்தை இருக்குது. இதுக்குமத்தியில மககூடயும், பேத்திகூடயும் இருக்க விருப்பப்பட்ட ஆறுமுகம், திருப்பூர் முருகம்பாளையம் பக்கத்துல உள்ள பாரக்காடு பகுதியில் குடியேறி அங்க உள்ள ஒரு சாய ஆலையில வேலை பாத்துட்டு இருந்துருக்காரு. இதுக்குமத்தியில மதுபோதைக்கு அடிமையான பிரவீன்குமார், மனைவி சீமியாவை அடிக்கிறது, ஆபாச வார்த்தைகளால திட்றதுனு டார்ச்சர் பண்ணினதா சொல்லப்படுது. அதனால, தம்பதிக்குள்ள தினமும் சண்டை சச்சரவுதான் ஏற்பட்ருக்கு. சிலநேரங்கள்ல ஆறுமுகம்தான் வந்து மருமகனை கண்டிச்சிருக்காரு. 17 நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு சென்ற சீமியாகணவரோட நடவடிக்கைகள்மேல அதிருப்தியில இருந்த சீமியாவுக்கு இன்ஸ்டாவுல ஒரு இளைஞர்கூட நட்பு ஏற்பட்ருக்குது. அந்த இளைஞர்கிட்ட தன் கணவர் அடிச்சி டார்ச்சர் பண்றது எல்லாத்தையுமே ஷேர் பண்ணிருக்காங்க சீமியா. அதனால, சீமியாவுக்கு ஆறுதல் சொன்ன அந்த இன்ஸ்டா இளைஞர் காதல்மழையும் பொழிஞ்சிருக்காரு. அந்த காதல் மழையில கரைஞ்ச சீமியா இன்ஸ்டா இளைஞர் கூடவே வாழ்றதுக்காக தன்னோட குழந்தையையும் விட்டுட்டு, கடந்த 17 நாட்களுக்கு முன்னால வீட்டவிட்டு வெளிய போய்ட்டாங்க. மகளை காணோம்னு பதறுன ஆறுமுகம், குடிச்சிட்டு வந்து தினம்தினம் சித்ரவதை பண்ணதாலதான் என் மகள் ஏதோ விபரீத முடிவெடுத்துட்டானு மருமகன்கிட்ட கத்திட்டு வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷன்லபோய் கம்ப்ளைண்ட் குடுத்துருக்காரு. அடுத்து வழக்குப்பதிவு பண்ண போலீசார், சீமியாவோட செல்போன் நம்பரை டிரேஸ் பண்ணி விசாரணையில இறங்கிருக்காங்க. அதுல, சீமியா கன்னியாகுமரியில இருக்குறதா லொகேஷன் காட்டிருக்குது. மகளுடன் சண்டைபோட்ட தந்தை ஆறுமுகம்அதுக்குப்பிறகு, குமரிக்குப்போன போலீசார், இன்ஸ்டா இளைஞரோட இருந்த சீமியாவைமீட்டு விசாரணை நடத்திருக்காங்க. அப்பதான், இன்ஸ்டா இளைஞர்கூட இருந்த காதல் விவகாரமே சீமியாவோட பெற்றோருக்கு தெரியவந்துருக்குது. அடுத்து, குழந்தை முகத்தை காட்டி சீமியாவை ஆறுமுகம் அழைச்சிருக்காரு. அதனால, மனசு மாறுன மகள் போலீசார்கூட திருப்பூருக்கு வந்துருக்காங்க. அடுத்து, காவல் நிலையத்துல வச்சி சீமியாவுக்கு அறிவுரை சொன்ன போலீசார், ஏதோ தெரியாம பண்ணிட்டாங்க, வீட்டுக்குப்பபோய் திட்டவோ இல்ல நடந்த விஷயத்த சொல்லி குத்திக்காட்டவோ கூடாதுனு ஆறுமுகத்துக்கு அட்வைஸ் பண்ணிருக்காங்க. அதுக்குப்பிறகு வீட்டுக்கு வந்த சீமியா கட்டில்ல படுத்து தூங்கிட்டு இருந்துருக்காங்க. மகளை பாத்து பாத்து ஆத்திரத்தோட உச்சிக்குப்போன ஆறுமுகம், குழந்தையை விட்டுட்டு வேறொரு இளைஞர்கூட போக உனக்கு மனசு எப்படி வந்ததுன்னு கேட்டு கத்திருக்காரு. பதிலுக்கு கத்துன சீமியா பிரவீன் படுத்துற கொடுமையில நான் எப்டி அவரோட வாழுறதுனு தான் செஞ்ச காரியத்தை நியாயப்படுத்தி பேசிருக்காரு.ஆறுமுகத்தை கைது செய்து அழைத்துச் சென்ற போலீசார்அப்பாவுக்கும், மகளுக்கும் இந்த சண்டை நடக்குறப்ப கடைக்கு போயிட்டாங்க சீமியாவோட அம்மா. அதனால, வாக்குவாதம் முத்திருக்குது. ஒருகட்டத்துல டென்ஷன் ஆன ஆறுமுகம் காய்கறி வெட்டுற கத்தியால மகளோட கழுத்த அறுத்து கொலை செஞ்சிருக்காரு. இதுக்குஇடையில கடைக்குப்போயிட்டு வந்த தாய், மகள் கொலை செய்யப்பட்டு கிடந்ததபாத்து கத்தி கூப்பாடு போட்ருக்காங்க. அடுத்து அங்க வந்த போலீசார் எந்த கேள்வியும் கேக்காம ஆறுமுகத்தை அரெஸ்ட் பண்ணிருக்காங்க. காரணம், ஏற்கெனவே சீமியா இன்ஸ்டா இளைஞரோட போன விவகாரம் போலீசாருக்கு தெரியும். போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து வீட்டுக்கு வந்த சிலமணிநேரத்துலதான் இந்த கொலையே நடந்துருக்குது.