திருப்பத்தூர் அருகே தனியார் கல்லூரி மாணவியை, காதலிக்கும் படி டார்ச்சர் கொடுத்து வந்த ஆய்வக உதவியாளரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கடந்த 6 மாதங்களாக ஆய்வக உதவியாளராக வேலை செய்து வந்த வாணியம்பாடியை சேர்ந்த நவீன்குமார், அதே கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மைனர் பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, திருப்பத்தூர் நகர காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதையும் படியுங்கள் : 3600 அடி நீள தேசிய கொடியுடன் 1,500 மாணவர்கள் பேரணி அரிமா சங்கம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ..!