கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டதால் இருவீட்டினரிடையே காவல் நிலையம் முன்பு மோதல் ஏற்பட்டது.ஆதி வராக நத்தம் பகுதியை சேர்ந்த கெளதமன் என்பவர் கந்தமங்கலத்தை சேர்ந்த உறவுப் பெண்ணான தென்றல் என்ற பெண்ணை கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.இருவீட்டாரின் சம்மதம் இல்லாத நிலையில் சிதம்பரம் காவல் நிலையத்தில் இருவரும் தஞ்சமடைந்தனர்.இதனை தொடர்ந்து பெண்ணின் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருடன் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.