புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஒருவர், லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் காலில் விழுந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். காமராஜர் நகர் தொகுதியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் திருபுவனை தொகுதி சுயேட்சை எம்எல்ஏ அங்காளன், மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் காலில் விழுந்தார். இவர், 4 முறை எம்.எல்.ஏ.வாகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்தவர்.