திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் திருவுருவ படத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தியதை தொடர்ந்து, அவர்களது குடும்பத்தினர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்கினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு சரியாக கையாளவில்லை என குறை கூறினார்.