கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 12 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், தந்தை, மகன் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குருபரப்பள்ளி என்ற இடத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், மைதா மாவு ஏற்றி சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த இரு கார்கள் மற்றும் பைக் மீது மோதியது.