பெரம்பலூரில் கெமிக்கல் கழிவுப் பொருட்களை ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் நம்பர் பிளேட்டை செம்மண் பூசி மறைக்க முயன்ற சம்பவம் சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது. சென்னை இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள பெயிண்ட் நிறுவனங்களில் உள்ள கழிவுகள் மற்றும் கெமிக்கல் கழிவுகளை ஏற்றிக் கொண்டு கரூர் நோக்கி சென்ற லாரி பெரம்பலூர் அருகே சென்றபோது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் அளித்த தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்த நிலையில் லாரி சேதமின்றி தப்பியது.இதையும் படியுங்கள் : தனியார் பாரில் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் மது விற்பனை... மதுவிலக்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை