நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் நெருக்கடியால் லாரி ஓட்டுநர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சீலாத்திகுளத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் முருகன், வள்ளியூரில் இயங்கி வரும் தனியார் பைனான்ஸ் நிறுவனத்திடம் 8 லட்சம் ரூபாய் கடன் பெற்று வீடு கட்டியுள்ளார். மாதந்தோறும் 14 ஆயிரம் ரூபாய் தவணை கட்டி வந்தவர், சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால் 2 மாதங்களாக கடன் தவணையை கட்டவில்லை. அதனை கேட்டு பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் திட்டியதால், கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் விரக்தியடைந்த முருகன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.