மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். கொள்ளிடம், அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த புவனேஷ் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் புத்தூரில் உள்ள எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சென்றனர். அப்போது எதிரே வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.