திருப்பூரில் பிரைடு ரைஸ் வர தாமதமானதால் உணவகத்தின் கண்ணாடியையும், கேசியரின் மண்டையையும் உடைத்துள்ளனர். வீரபாண்டி காவல் நிலையம் அருகே உள்ள பெப்சி என்கிற உணவகத்தில் சாப்பிடுவதற்காக சென்ற கௌதம், பிரைடு ரைஸ் ஆர்டர் செய்துள்ளார். அங்கு அவருக்கு பிறகு வந்தவர்களுக்கு உணவு வழங்கியதாகவும், கௌதமுக்கு வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது நண்பர்களுக்கு போன் செய்து வரவழைத்து கடையை சூறையாடி, கேசியரையும் தாக்கியுள்ளார். ஒருவரை கைது செய்த போலீஸார், தப்பியோடிய 6 பேரை தேடி வருகின்றனர்.